எண்ணூர் அனல்மின் நிலைய விபத்துக்கான காரணம், ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் சொந்த ஊர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றும் சிவசங்கர் கூறினார்.