டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக எக்ஸ்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,
கரூர் பெருந்துயரம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும், EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஏடிஜிபி, ஆகியோர் பிரஸ்மீட் கொடுப்பதும், முதல்வர் வீடியோ வெளியிடுவதும், செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பதுமாக திமுக சொல்ல வருவது என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் செய்ய வேண்டாம் எனக்கூறி தொடர்ந்து அரசியல் செய்வது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, திமுகவின் இந்தப் பதற்றம்தான் உண்மையிலேயே கரூரில் என்ன நடந்தது? என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறியுள்ளது.
தொடர்ந்து, டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, இப்போது பதறுவது ஏன்? என்றும், கரூரில் 41 உயிர்கள் பலியானதும் செந்தில்பாலாஜி இது குறித்து பேசுகிறார் என்றால், திமுக அரசின் அலட்சியத்தை மறைப்பதற்கான அரசியலா? என்றும் அதிமுக சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.