விஜயதசமி பண்டிகையையொட்டி கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமானோர் , சுவாமி தரிசனம் செய்தனர்.
9 நாட்கள் கடைபிடிக்கப்படும் நவராத்திரி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோயில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் கொலு வைத்து, அம்மனை வழிபட்டனர். நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் அம்பிகை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று விஜயதசமியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள், தங்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து, விஜயதசமி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.