சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஐயப்பன்தாங்கல் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியையொட்டி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் பாரதமாதா பூஜை, தேசப்பற்று பாடல், யோகா உள்ளிட நிகழ்ச்சிகளை நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அதே பள்ளியில் விஜயதசமி அன்று நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி அல்லது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாத நிலையில், அங்கு சென்ற போலீசார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கைது செய்து ஐயப்பன்தாங்கல் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.