நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்ட்ரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ஆகிவிட்ட காலத்தில் SONOGRAPHY, X-RAY, ECG, CT SCAN, MRI, DIALYSIS போன்றவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.
மக்களின் உடல்நலனை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் CT SCAN, MRI போன்ற உயர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களால் மருத்துவத்துக்கு செலவழிக்கும் தொகையில் 70 விழுக்காட்டை சேமிக்கலாம்.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளில் பணிகள் எந்தளவுக்கு நிறைவடைந்துள்ளன என்பதை கண்காணிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதோடு தரத்தையும் உறுதிப்படுத்த முடியும். மாரடைப்பால் திடீரென சுவாசம் நின்றுவிட்டால் வழங்கப்படும் CPR சிகிச்சை குறித்து மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக சேவையாற்றும் ஊழியர்களை கவுரவிக்கவும் மகாராஷ்ட்ரா அரசு தவறவில்லை. NURSING HOME-களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் திட்டத்தையும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு தொடங்கியுள்ளது. MAHATMA JYOTIRAO PHULE JAN AROGYA YOJANA என்ற காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் மூலம் கிராமப்புறங்களில் TB நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
5 குடும்பங்களை கண்காணிக்க ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சாத்தியமான அனைத்து வழிகளிலும் மகாராஷ்ட்ர மக்களின் உடல்நலத்தைப் பேண நடவடிக்கை எடுத்து வருகிறது பா.ஜ.க. அரசு.