பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 126 அத்தியாயங்களாக ஒளிபரப்பபட்டு நூறு கோடி மக்களை சென்றடைந்தது.
இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் மன் கி பாத் நிகழ்ச்சி 22 இந்திய மொழிகளிலும், 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் 34.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.