புதுச்சேரியில் மாமூல் தராததால் பட்டாக்கத்தியால் பேக்கரியை ரவுடிகள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குக் கோட்டகுப்பத்தை சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் கடையில் இருந்த ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவுடிகள், மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் பேக்கரியை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த முத்தியால்பேட்டை எம்எல்ஏ பிரகாஷ் குமார், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். மாமூல் தருமாறு பேக்கரியை ரவுடிகள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.