இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் வேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
இந்தியாவில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில், பும்ரா தற்போது ஜவகல் ஸ்ரீநாத்துடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் 24 இன்னிங்ஸ்களில் தனது 50-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திச் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.