மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை, இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 60-வது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தின்போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது.
இதற்குப் பதிலடி கொடுத்த இந்திய தூதர் முகமது ஹுசைன், சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள்குறித்து மற்றவர்களுக்குப் போதிக்க முடியும்? எனப் பாகிஸ்தானை கடுமையாகச் சாடினார்.
மேலும், பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்விகளை புறக்கணித்து, சர்வதேச மன்றங்களை பயன்படுத்தி, இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது எனவும் முகமது ஹுசைன் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச மன்றத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டை சுமத்தும் போதெல்லாம் பாகிஸ்தான் மூக்குடைபட்டு வருகிறது எனப் பலரும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.