யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக உள்ள ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம்மூலம் ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோக்கள் யூ டியூப் மூலம் பரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடியோ பரவக் காரணமான யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்களைப் பதிவிடுவதை தடுக்க யூடியூப் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலில் பரப்பப்பட்டுள்ள இந்த ஏ.ஐ வீடியோக்கள் மொத்தம் ஒன்றரை கோடி பார்வைகளை பெற்றுள்ளன.
ஐஸ்வர்யா ராய் உள்பட பல பிரபலங்களின் 250க்கும் மேற்பட்ட டீப் பேக் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.