கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சையில் இருந்த போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பு ராமதாஸ் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிர் பிழைக்க வாய்ப்பில்லையென மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தம்பு ராமதாஸ் உயிரிழந்துவிட்டதாக எண்ணிய அவரது உறவினர்கள் அனைத்து பகுதிகளிலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்களும் மாலையுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டிற்கு வரத் தொடங்கினர்.
ஆனால் வீட்டில் தம்பு ராமதாஸ் உயிருக்குப் போராடிய நிலையில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உயிருக்குப் போராடும் நபருக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்கு கொண்டு வந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.