கரூரில் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆய்வு நடத்தினார்.
வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் எம்.பிக்கள் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கூட்ட நெரிசலில் பலியான குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்ற பேபி மற்றும் எம்.பிக்கள் இரங்கல் தெரிவித்ததோடு அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
சிறுவனின் தாய் மாற்றுத்திறனாளி என்பதால் கூட்ட நெரிசல் குறித்து அவரது உறவினரிடம் கேட்டறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவி செய்வதாகக் கூறி அவர்களிடம் இருந்து தொலைபேசி எண்ணை வாங்கி சென்றனர்.