கலிபோர்னியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட பூனையை உரிமையாளர் கட்டியணைத்து கண்ணீர் சிந்தும் பாச போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளை சுற்றியே மனிதர்களின் வாழ்க்கையும் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. மனிதர்களின் வாழ்வியலோடு பல்லுயிர்கள் பின்னிப் பிணைந்துள்ளது.
மனிதர்களை போல் பரிவு, அன்பு, தாய்மையை குட்டிகளுடன் விலங்குகள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அந்த வகையில், கலிபோர்னியாவின் டார்சானாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய தீயால் வீடு முழுவதும் எரிந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் சிக்கிய பூனையை மீட்டனர். காப்பாற்றப்பட்ட பூனையைப் பார்த்தவுடன் கையில் தூக்கி வீட்டின் உரிமையாளர் கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.