கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை புகுந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பகுதிக்குள் உணவு தேடி அடிக்கடி காட்டு யானைகள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் கோயில் பகுதிக்குள் உலா வந்த காட்டுயானை ஒன்று கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தது.
இதைக்கண்டு அச்சமடைந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்ததால் அங்குப் பதற்றம் நிலவியது. காட்டுயானை உலா வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.