கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த தம்பதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஹாசன் மாவட்டம் ஹலே ஆலுரு கிராமத்தில் சுதர்ஷன்- காவியா தம்பதி வசித்து வந்தனர். அவர்கள் வசித்த வீட்டில் கடந்த 30ம் தேதி மர்ம பொருள் பயங்கர சத்ததுடன் வெடித்தது.
இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் சிலிண்டர் வெடிக்கவில்லை எனவும, எந்தப் பொருள் வெடித்தது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.