புதுச்சேரியில் பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி அப்புவை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்,
புதுச்சேரி முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலையில் கிரி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார்.நேற்று விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அப்பு ஜகவார் என்ற ரவுடி மற்றும் சிறாரொருவர் பேக்கரிக்கு வந்தனர். அப்போது, கடை ஊழியர் சக்திவேலிடம், மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அப்புவை கைது செய்ய சின்ன கோட்டகுப்பம் பகுதிக்கு சென்றனர்.அப்போது போலீசாரை கண்டதும், ரவுடி அப்பு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கையில் எலும்பு முறிவும் முகத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பு மற்றும் உடந்தையாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.