தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டுச் சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாகக் கூறி மனுதாரர் அனுமதி பெற்றார்.
அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.