காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்கள் அடங்கிய அமைதி திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாகப் பதிலளித்துள்ளது.
இதனால் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்தினால்தான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் எனக் கூறியுள்ளார்.