தெலங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வந்த புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்து பெண்ணின் வீட்டார் அசர வைத்துள்ளனர்.
வனபர்த்தி மாவட்டம் கோத்தகோட்டாவை சேர்ந்த குந்தா சுரேஷ் மற்றும் சஹானாலா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், நிகித் என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தசரா பண்டிகையை ஒட்டி நிகித் மனைவி சிந்துவுடன் அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது புது மருமகன் நிகித்திற்கு 60 வகையான இனிப்புகள் உட்பட 101 வகையான உணவுகளை அவரது மாமியார் பரிமாறி ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது 101 வகை உணவுகளில் ஒன்று குறைந்தால் என்ன செய்வீர்கள் என்று நிகித் நகைச்சுவையாக தனது மாமியாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது 101 உணவுகளில் ஒன்று குறைந்தால் தங்க நாணயம் வழங்குவதாக அவரது மாமியார் அறிவித்தார்.
இதையடுத்து உணவுகளை நிகித் இருமுறை எண்ணி பார்த்தபோது 100 வகையான உணவுகள் இருந்ததால் அவரது மாமியார் தங்க நாணயத்தைப் பரிசளித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.