கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆய்வாளர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் அன்று இரவே புறப்பட்டு நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு வந்தார். அன்றிலிருந்து கூடுதல் போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் என 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஜய் வீடு அமைந்துள்ள சாலையில் தொண்டர்கள் சென்று விஜய் வீட்டின் முன்பு குவியாமல் இருக்க போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்து அவ்வழியாகச் செல்ல முயற்சிப்பவர்களை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்தச் சாலையில் வசிக்கக் கூடிய நபர்களை மட்டுமே அனுமதித்து, வேறு நபர்கள் அவ்வழியை பயன்படுத்த அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.