கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக சார்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து போலீசார் அங்குத் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தைத் தவிர்த்து பிற இடங்களில் குவிந்துகிடந்த காலணிகள் மற்றும், கட்சி கொடிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.