கொடைக்கானலில் தொடர் விடுமுறை முடித்து சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், காலாண்டு மற்றும் பண்டிகைக்கால தொடர் விடுமுறையால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
கொடைக்கானலில் இருந்து வெளியூருக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், பேருந்தில் நிற்கக்கூட இடம் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாகினர்.
தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.