அமெரிக்காவின் சிகாகோவில் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி விசாக்காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராகச் சிகாகோவில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பெண் ஒருவரை சுட்டுக்கொன்ற போலீசார், தற்காப்புக்காகக் கொன்றதாக விளக்கமளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிகாகோவில் 300க்கும் மேற்பட்ட தேசிய காவல்படை வீரர்களை நிறுத்தி, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.