திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் ரஞ்சித் தலைமையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் வேல் வைத்துப் பூஜை செய்தனர்.
வீடுதோறும் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்யும் நோக்கில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள கோயில்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வேல் வைத்துப் பூஜை செய்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் ரஞ்சித் தலைமையில் வேல் வைத்துச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல், அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ஜெயா கார்த்திக் தலைமையில் வேல் வைத்துச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.