கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி திருக்கோயில் மற்றும் மாதா அமிர்தானந்தமயின் அமிர்த சேவா கேந்திரம் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தத் திருவிளக்கு பூஜையைச் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி விக்டோரியா கெளரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.