திருச்சியில் இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களைக் கவர்ந்தது.
திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள அரங்கில் தனியார் அமைப்புமூலம் இளைஞர், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மிஸ் திருச்சி, மிஸ்டர் திருச்சி, மிஸ்ஸஸ் திருச்சி, கிட்ஸ் திருச்சி என நவநாகரீக பேஷன் ஷோ நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள் தமிழகத்தின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட நாகரீக ஆடைகளை அணிந்து ஒய்யார நடைபோட்டனர்.
இதில் பட்டங்களை வென்றவர்கள் கிரீடம் அணிவித்து கேடயம் அளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.