கோவில்பட்டி அருகே இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்திக் கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாமஸ் நகரில் உள்ள CSI கிறிஸ்தவ தேவாலயத்தின் கீழ் ஐந்து கிறிஸ்தவ சபைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தத் தேவாலயம் மற்றும் சபைகளுக்குப் பங்குத்தந்தை தனசிங் என்பவர் தலைவராகச் செயல்பட்டு வரும் நிலையில், தேவாலயத்திற்கு வருபவர்கள் அளிக்கும் காணிக்கையை தன்னிச்சையாகச் செலவு செய்து வருவதாகவும், ஆராதனை நேரத்தில் சாபமான வார்த்தைகளைப் பேசுவதாகவும் கிறிஸ்துவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இரு பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் பங்குத்தந்தை தனசிங்கை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தித் தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.