இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 4 ஆவது கௌடில்ய பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது எனத் தெரிவித்தார். இந்த வரி விதிப்பு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காகவே விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதேபோல் ரஷ்யாவுடன் மேலும் சில நாடுகள் எண்ணெய் வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவை மட்டுமே அமெரிக்கா குறிவைத்து கூடுதல் வரி விதித்ததாக ஜெய்சங்கர் கூறினார்.