சிட்டிசன் படத்தில் இடம்பெற்றுள்ள இது போன்ற சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது.
சேரன் நகர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அடிப்படை வசதி கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவினை ஆய்வு செய்த அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்குப் பதில் மனு அளித்தனர். அதில் உங்கள் பகுதிக்கு ஏற்கனவே சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதில் மனு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தேர்தலைப் புறக்கணிப்போம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.