பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தளவாட உதவிகளை வழங்கிய நபரைக் கைது செய்தது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, என்ற நபரைப் போலீசார் கைது செய்தனர்.
அவரைக் கைது செய்ய முக்கிய ஆதாரமாக இருந்தது பயங்கரவாதிகளுக்கு வழங்கிய ஆண்ட்ராய்டு செல்போன் சார்ஜர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் சார்ஜர் வாங்கப்பட்ட இடத்தில் விசாரித்ததன் மூலம் கட்டாரியை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.