தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தில் குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லையென குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
வலசை கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜெயராமன் என்பவர் காலிகுடங்களை தலையில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
இவருக்கு அப்பகுதி பெண்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக வெற்றிபெற தனது பகுதியில் இருந்து வாக்குகளை பெற்றுதந்ததாகவும், ஆனால் தனது பகுதியிலே குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் ஜெயராமன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.