சென்னை அம்பத்தூர் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் இளைஞர், பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பான இந்தச் சாலையில் தலைக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர், அதனை வீடியோவை எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.