கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பெரும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விரைவில் நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறுவார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய காணொலி வாயிலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் என்பவரின் தாய், தங்கை ஹர்ஷினியுடன் விஜய் வீடியோ காலில் பேசியதாகவும், நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என விஜய் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசியதாகவும், வீடியோ காலில் பேசியபோது புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.