கரூர் சம்பவத்தை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பேசியவர்,
பாம்பன் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்தபோது செல்லாத முதல்வர் கச்சத்தீவை பற்றிப் பேசுகிறார் என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
கரூர் சம்பவத்தை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவை பற்றி முதலமைச்சர் ராமநாதபுரத்தில் பேசுகிறார் என்றும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் ஆட்சி செய்த கருணாநிதி தான் கச்சத்தீவை கொடுத்தார் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை விட்டுவிட்டு ஏதோ ஒரு விஷயத்தை முதலமைச்சர் பேசுகிறார் என்றும் கமல் இத்தனை நாட்கள் கழித்து ஏன் கரூருக்கு சென்றார் என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
கரூரில் நடைபெற்ற துன்பம், கொடுமை அனைத்துக்கும் முழு பொறுப்பு திமுக அரசு தான் என்றும் எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் கடைசி நிமிடம் வரை பிரச்னைக்கு உள்ளாக்கித் திமுக செயலாற்றுகிறது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.