தெலங்கானா அரசு எஸ்.சி மாணவர்களுக்கான பள்ளி கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், மாணவ, மாணவிகள் வெளியே அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.ஏ.எஸ் திட்டத்தின் கீழ் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜக்தியாலில் உள்ள பல தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர்.
இவர்களுக்கான பள்ளி கட்டணத்தை அரசே ஏற்கும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகையை அரசு செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியது. இதன் காரணமாக ஜக்தியால் – கரீம்நகர் நெடுஞ்சாலையில் அமர்ந்து பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.