கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27-ம் தேதி, தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று 15-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், 3-வது நாளாக வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.