25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இது ஒரு வரலாற்று சாதனை என்றும், பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.
மேலும், PM மோடி தேசத்திற்கு நேர்மையுடன் சேவை ஆற்றுவதாகவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.