உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக கடந்த 6ம் தேதி கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி கவாயை நோக்கி வீச முயன்றார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தடுத்ததால் நீதிபதி மீது படாமல் அது கீழே விழுந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென தலைமை நீதிபதி கூறியதால் அவரை போலீசார் விடுவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி கவாய் சனதான தர்மத்தை அவமதித்ததாகவும் அதற்காகவே அவர் மீது காலணியை வீசினேன் எனவும் கூறினார். இதற்காகதான் தலைமை நீதிபதியிடம் எவ்வித மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.