சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி பேருந்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து துறைகளிலும் தனி முத்திரையைப் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன் போக்குவரத்து துறையிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார் மற்றும் தானியங்கி பேருந்துகளின் சேவை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
ஓட்டுநர், நடத்துனர் இன்றி இந்தத் தானியங்கி பேருந்துகள் சீனாவின் ஷென்சென் மற்றும் சோங்கிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயக்கப்படுகின்றன.
முக்கிய சாலைகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் பாதுகாப்பாகச் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.