தலைமைப் பணியில் வெள்ளி விழா காணும் பிரதமர் பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடியின் பொது சேவையின் 25 வது ஆண்டை நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம். குஜராத் மாநில முதல்வராக இருந்த காலத்திலிருந்து தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் தம்முடைய மாநிலத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்றினார்.
இன்று, Make in India, Digital India, மற்றும் Aatmanirbhar Bharat போன்ற முயற்சிகளின் மூலம், நமது பாரதம் சுயசார்பு அடையும் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறார். நமது பிரதமரின் தலைமையில் கற்பனைகள் செயல்பாடாகவும், கனவுகள் நிஜமாகவும் மாறியுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக, உண்மையான தலைமை என்பது அதிகாரத்தை நாடுவது அல்ல, மாறாக மக்களுக்கு சேவை செய்வதுதான் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஒழுக்கம், நேர்மை, தைரியம் ஆகியவற்றுடன் ஆட்சி செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நமது பிரதமரின் உறுதியான கொள்கைகள், மற்ற நாடுகளுடனான வலுவான தூதரக உறவுகள், மக்களுக்கான முன்னுரிமை கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் உலக அரங்கில் பாரதத்தின் புகழ் வானளவு உயர்ந்துள்ளது.
நமது பிரதமரின் ஒவ்வொரு முடிவும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நலனையும் முன்னிறுத்துவதாகவே உள்ளது. PM Kisan Samman Nidhi, Ujjwala Yojana, Swachh Bharat Abhiyan, Jan Dhan Yojana போன்ற முக்கிய திட்டங்கள், நமது நாட்டின் அனைத்து கிராமத்திற்கும் நகரத்திற்கும் சென்றடைந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து வழங்கிய சேவைக்கு தமிழக பாஜக
சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரவிருக்கும் காலங்களிலும் இதே உறுதியுடன் பாரதத்தை வழிநடத்த இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வாதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.