ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி, இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, இந்தியாவுக்கு ஒரு நம்பகமான தன்மையுடன் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

70 ஆண்டுகாலமாக ஜப்பான் அரசியலில் ஒரே பெரும் சக்தியாக விளங்கும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி என்ற LDP கட்சி, சனே தகைச்சியின் மூலம், முதல் முறையாக ஒரு பெண்ணின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார் என்ற அடிப்படையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகி உள்ளார் 64 வயதான சனே தகைச்சி.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரேட் தாட்சரை தனது ரோல் மாடலாகக் கொண்ட சனே தகைச்சி, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர பழமைவாத சித்தாந்த சீடராக விளங்கினார். சீனா மற்றும் வட கொரியா மீதான வெறுப்பும், பகையும் கொண்ட தீவிர தேசியவாதியாகவும், அரசியலமைப்பு சார்பு திருத்தவாதியாகவும் உள்ள சனே தகைச்சி ஜப்பானின் பாரம்பரிய சமூக கட்டமைப்பின் தீவிர பாதுகாவலராகவும் உள்ளார்.

பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஜப்பானின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் நவீன மாற்றங்களை உருவாக்கும் ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருக்கிறார். 1993ஆம் ஆண்டு, 32 வது வயதில் தனது சொந்த ஊரான நாராவிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சி உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அபெனோமிக்ஸ் எனப்படும் எளிதான பணக் கொள்கைகளை வலியுறுத்திய சனே தகைச்சி, செமிகண்டக்டர் உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் முன்னுரிமை அளித்து வந்தார். விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தலுக்கு ஒரு முக்கியமான ஜனநாயக, தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி நட்பு நாடு என்று இந்தியாவைப் பாராட்டியுள்ள சனே தகைச்சி, தாம் ஜப்பானின் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த காலங்களில் இருமுறை பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய சனே தகைச்சி, இந்திய -பசிபிக் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். ஏற்கெனவே கடந்த 25 ஆண்டுகளாகவே இந்தியாவும், ஜப்பானும் இருநாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை பேணி வருகின்றன.

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு டெல்லி மெட்ரோ முதல் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வரை, நிதி மற்றும்தொழில்நுட்ப வகையில் ஜப்பான் பங்களித்துள்ளது. மலபார் பயிற்சி தொடங்கி பாதுகாப்புத் துறையில் இரு நாட்டுக் கடற்படைகளும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் ஜப்பானின் US-2 ஆம்பிபியஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டத்தில் ஜப்பான் இணைந்துள்ளது.

இந்தச் சூழலில், ஜப்பானின் பிரதமராகச் சனே தகைச்சி பதவியேற்பது, இந்தியாவுக்குச் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இனி ஜப்பானின் பொருளாதார பாதுகாப்பின் அச்சாணியாக இந்தியா மாறக்கூடும் என்றும், ஜப்பான்-இந்தியாவின் அச்சாக மாறக்கூடும் என்று நம்பப்படுகுிறது. செமிகண்டக்டர், அரிய வகை கனிமங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் AI உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் ஜப்பான் இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம், சீன விநியோகச் சங்கிலித் தாக்கத்திலிருந்து ஜப்பானின் தொழில்நுட்பத் தளத்தைப் பாதுகாப்பதற்கு இந்தியாவுடனான உறவைச் சனே தகைச்சி வலுப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. குவாட் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜப்பான், இந்திய பசிபிக் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டு மேம்பாடு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் முதலீடு செய்யத் தயாராகும் என்பதால், அது இந்தியாவுக்குப் பலமாக அமையும் என்று கருதப் படுகிறது.

சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் அடிக்கடிப் பாதிக்கப்படும் இந்தியாவும், ஜப்பானும் பயனுள்ள இடங்களில் ஒத்துழைக்கவும், தேவையான இடங்களில் தடுக்கவும் என ராஜதந்திரத்தை இணைந்து பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் மோடியும், சனே தகைச்சியும், தன்னம்பிக்கை, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பொருளாதார தேசியவாதம் மற்றும் இறையாண்மை குறித்த உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பதால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்ததாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags: Japan's first female Prime Minister: Interested in joining hands with India against Chinaஜப்பானின் முதல் பெண் பிரதமர்Indiachinausajappan
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

Next Post

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies