இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு வரியை 100 சதவீதமும், மின்கட்டணத்தை 67 சதவீதமும் திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டாலின் அரசு திறந்து வருவதாகவும் அவர் சாடினார். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கல்வி புரட்சி காரணமாக 55% மாணவர்கள் பட்டபடிப்பு பயின்றனர் எனறும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் திருச்செங்கோட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.