கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கணவன் சந்தேகம் அடைந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், மனைவி பணிக்கு சென்ற போது, அங்கு சென்ற பாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வயிற்றில் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் பாரதியை பிடித்து போலீசில் ஒப்படைந்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.