சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தைச் சம்பாதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தற்போது இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாகவும், டி20 அணிக்குத் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். டி20 அணிக்குச் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார்.
அவரது ஓய்வுக்கு பின்னர் சுப்மன் கில் இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கேப்டனாகச் செயல்படத் தகுதியானவர் என்றும், டி20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்தியாவை கேப்டனாகத் தலைமை தாங்கச் சரியானவர் என்றும் முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.