ஜப்பானை தாக்கிய புயலால் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில தினங்களாக ஜப்பானில் வானிலை மாற்றம் அதிகரித்து காணப்பட்டது.
அதனைதொடர்ந்து புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, டோக்கியோவில் உள்ள ஹச்சிஜோஜிமா நகரத்தைப் புயல் கடந்தது.
அப்போது சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வீட்டின் மேற்கூரைகள், வாகனங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.