மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்குத் தேவையான ஜவுளி பொருட்களை வாங்க வந்தவண்ணம் உள்ளனர்.
இதையொட்டி, விளக்குத்தூண் பகுதியில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாகப் பொருட்களை வாங்கிச் செல்ல அனைத்து கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.