சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
குவாங்சியில் உள்ள லாங்ஜோ கவுண்டியில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் அங்குள்ள சுவோஜியாங் நதி அபாய அளவை தாண்டித்து பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், தாழ்வான பகுதிகள், வீடுகள் எனப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.