திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.
இதில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த 646 கல்லூரி மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நான்கு நாட்கள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மூன்று அணிகளுக்கு முதல் பரிசாக 12 லட்சமும், இரண்டாம் பரிசாக 8 லட்சமும், மூன்றாம் பரிசாக 4 லட்சமும் வழங்கப்பட உள்ளது.