நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜூன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் பாம் திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் பாம் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.