தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத்துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி பட்டியலை 30 நாட்களில் வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்த குமார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.